உடையார்
1
இந்த முறை புயல் வந்தால் இதை விடவும் சிறப்பாகச் செய்ய வேண்டும். புயல் வருகிறது என்று தெரிந்துவிட்ட பிறகு, வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. வெள்ளம் வருகிறதா என்று பார்க்க காவிரிக் கரைக்குப் போய்த்தான் ஆக வேண்டும்.
கமலக்கண்ணன் தூங்கி விட்டானா.. அவனை எழுப்பி குதிரை தயார் செய்யச் சொல்லலாமா.. தென்கரையை மட்டும் பார்த்து வந்தால் போதாது. வட கரையையும் பார்க்க வேண்டும்.
ஒரு வேளை ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் இருந்தால் நீந்துகிற குதிரை நல்லது. எந்த குதிரை' என்ற பிரம்மராயர் யோசித்தார்.
அவர் மாளிகையின் பின்பக்கமுள்ள ஓட்டு வீட்டிலிருந்து ஒரு குதிரை தடந்து வந்தது. அதற்குச் சேணங்கள் அணிவிக்கப் பட்டிருந்தன. சற்று தள்ளி தோனில் வளையமாகச் சுற்றப் பட்ட நீண்ட மணிக்கயிறோடும், உயரமான ஈட்டியோடும், முதுகில் மரத்தாலான மிதவையோடும் கமலக்கண்ணன் வந்து கொண்டிருந்தான். அருகே வந்த அவர் கால் தொட்டு தலையில் வைத்துக் கொண்டான்.
கமலக்கண்ணனின் புத்தி மிகக் கூர்மையானது. அவர் மனதில் நினைப்பதை முகம் பார்த்துச் சொல்லி விடுவான். ஐயன் கோபமாக இருக்கிறார். அருகே போகாதீர்கள்' என்று எச்சரிப்பான்.
'ஐயன் போர் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். பெண்கள் தங்கள் குறையைச் சொல்ல இதுதான் நேரம். இப்போது எது கேட்டாலும் கிடைக்கும் போ' என்று துரிதப் படுத்துவான்.
கிருஷ்ணன் ராமனான பிரம்மராயருக்கு கமலக்கண்ணன் வலது கை. மறவர் குடியில் பிறந்தவன். ஐயனிடம் வேலை செய்வது எளிதல்ல. ஆனால் ஐயன் ஜாதி தாண்டியவர். சைவ, வைஷ்ணவ பேதம் தாண்டியவர், காபாலிகர்களைப் பார்க்கும்போது சற்று எரிச்சலடைவாரே தவிர, எவர் மீதும் எந்த துவேஷமும் இல்லாதவர்.
"ஐயன்"- கமலக்கண்ணன்உரக்கக் கூப்பிட்டுதொண்டையைச் செருமிக் கொண்டான்.
"இரவு நீங்கள் படுக்கப்போகும் போது வானத்தைப் பார்க்கவில்லை. திருமந்திர ஓலையாரிடம் சுட்டளைகள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். கல்லணை பகுதியில் நீர் அலைமோதி முட்டுகிறது என்று நேற்றிரவு செய்தியும் வந்தது.
திருக்காட்டுப்பள்ளி கிராம அதிகாரிகன் ஒன்றுகூடி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட, நேற்று காலையே உத்தரவிட்டு விட்டார்கள். மாலையில் பாசன வாய்க்கால் சுழித்துக் கொண்டு ஓடுகிறது. 'பறையறிவிக்காமல் பாசன வாய்க்கலில் நீர் அனுப்பியது தவறு' என்று தஞ்சைப்பக்கம் கிராம மக்கன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்,
எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், காவிரியில் வெள்ளம் வரும் என்று நானும் முடிவு செய்தேன். இரவே குதிரைக்குச் சேணம் பூட்டி வைத்துவிட்டேன்."
"நான் விழித்தது எப்படித் தெரிந்தது உனக்கு.?
"உங்கள் கொல்லைக்கதவில் பட்டுநூல் கட்டி, நாரத்தை மரம் வழியாக பவழமல்லிச் செடியின் ஊடே நூல் எடுத்து வந்து, என் வீட்டுக் கூரையில் கிளிக்கூண்டில் கட்டி விட்டேன். நீங்கள் கதவு திறந்ததும் கிளிக்கூண்டு ஆடி, கிளிகள் சலசலத்தன. விழித்துக் கொண்டு விட்டேன். நீங்கள் வெளியே வத்தீர்கள். நான் தயாராகி விட்டேன்."
"கமலக்கண்ணா. உன்னைப்போல் ஒற்றன் தமிழ்நாட்டில் யாருமே இல்லை. எனக்கே ஆள் வைத்து வேவு பார்த்தாலும் பார்ட் பாய்..." பிரம்மராயர் சிரித்தபடி சொன்னார்.
"சிவசமயம் அதையும் செய்ய வேண்டித்தான் வரும்.'கமலக்கண்ணன் அடக்கமாகச் சொன்னான்.
பிரம்மராயர் முகத்தில் ஆச்சரியம் காட்டாமல் அந்தப் பேச்சைக் குறித்துக் கொண்டார்.
அவர் கண்கள் கூர்மையாகி அடங்கியதை கமலக் கண்ணனும் பார்த்தான். ஐயன் அந்த வார்த்தைக்குப் புள்ளி வைத்து விட்டார் என்று புரிந்து கொண்டான். அவனும் சலனம் காட்டாது அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"உன் குதிரை எங்கே கண்ணா" - பிரம்மராயர் பேச்சைத் திசை மாற்றினார்.
"அதைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நேற்று பகலெல்லாம் அது வேண்டிய மட்டும் வேலை செய்திருக்கிறது. இப்பொழுதும் விரட்டினால் நாளை சுருண்டு விடும்." "கொட்டடியில் குதிரைகளா இல்லை. வேறு எடுத்துக்கொள்ளேன்.."
"இரவு நேரம் நகரத்தின் வழியே இரண்டு குதிரைகள் போனால் ஜனங்கள் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருப் பார்கள். ஒற்றைக் குதிரைச் சத்தமெனில் 'யாரோ வழிப் போக்கன்' என்று விட்டு விடுவார்கள். நீங்கள் சால்வை போர்த்திக் கொண்டு குதிரையேறிப் போங்கள். நான் குறுக்கு வழியே காவிரிப் படித்துறைக்கு வருகிறேன். காவிரியைப் பார்த்ததும் மற்றதை முடிவு செய்வோம்.."
கமலக்கண்ணன் நன்றாய் ஓட்டம் பழகியவன். ஒற்றர்கள் எல்லோருமே கையில் குத்தீட்டியுடன் வெகுதூரம் ஓடத் தெரிந் தவர்கள். சில சமயம் குதிரைகளைவிட துரிதமாய் செயல் படுபவர்கள்.
'இப்போதும்கூட நகரைச் சுற்றிப் போவதற்குள் இவன் வயல்வெளிகளினூடே ஓடிப்போய் காவிரியைச் சேர்ந்து விடலாம். அவன் ஓடியே வருவது நல்லது' என்று பிரம்மராயர் தீர்மானம் செய்தார். கொல்லைக் கதவை வெறுமே சார்த்தினார். குதிரையேறினார். கமலக்கண்ணன் கை தட்ட, ஒரு காவலாள் கொல்லைக் கதவின் பக்கம் வந்து நின்று கொண்டான்.
பிரம்மராயர் தன் மாளிகையைச் சுற்றிக் கொண்டு வெளியேறினார். தெருவில் மிருதுவாக தன் குதிரையை ஓட்டிக்கொண்டு போனார். தெரு முடித்ததும் சற்று விரைவாக குதிரையை விரட்டினார். கவ்வணைக்குப் போகும் நெடுஞ்சாலையைக் கடத்தார். மாஞ்சோலைக்குள் இறங்கினார். அந்தப் பாதை சரிந்துகொண்டே காவிரிக் கரைக்குப் போயிற்று. குதிரை ஆற்றுக்கு அருகே போய் நின்றது.
ஏரிக்கரையிலிருந்து மூன்று மாட்டு வண்டிகள் ஆற்றில் இறங்குவது தெரிந்தது. மாட்டு வண்டியைச் சுற்றிலும் ஆட்கள் இறங்கி வண்டியைத் தன்னிக்கொண்டு வந்தார்கள். கிருஷ்ணன் ராமனான பிரம்மராயர் உற்றுப் பார்த்தார். தள்ளுகிறவர்கள் வித்தியாசமாகத் தெரிந்தார்கள்.
"தேவரடியார்கள்.." பின்னே கமலக்கண்ணன் குரல் கேட்டது. அதில் சற்று மூச்சிரைப்பு இருந்தது.
அத்தனை பேருமா..?
"ஆமாம். அத்தனை பேரும்."
"போன பௌர்ணமிக்குக் குடி பெயரச் சொல்லி ஓலை அனுப்பினோமே... அவர்களா..." பிரம்மராயர் நினைவு வந்தவராய் கேட்டார்.
"இருக்கலாம்."
இரண்டு உருவங்கள் காவிரியை வேகமாய் நீந்திக் கடந்தன. தரையில் அழுந்தி, கால் வைத்துக் கரையேறின. அங்கு ஆண்கன் இரண்டு பேர் இருப்பதை அறியாது, மேல் துணியை விலக்கி ஒட்டப் பிழிந்து, உதறி, பிழித்ததை இடுப்பில் கட்டிக் கொண்டு, இடுப்பின் ஈரத் துணியை உருவி, அதையும் பிழிந்து உதறி நிதானமாய் மேலே போட்டுக் கொண்டார்கள்.
கரையேறிய இரண்டு பேரும் இளம் பெண்கள். திரட்சியான உடலமைப்பு உள்ளவர்கள். சபையில் ஆடி திமி ரேறியவர்கள். அவர்கள் அசைவுகளில் அலட்சியம் இருந்தது. அவர்கள் தலை அமிழ்ந்து உதறியபோது முகத்தில் நீர்த்துளிகள் பட்டன.
ஆண்கள் இருவரும் தலை திருப்பிக்கொள்ள, பிரம்ம ராயரின் குதிரை முகமசைத்துக் கனைத்தது.
பெண்கள் திடுக்கிட்டுத் திரும்பினார்க... அதில் ஒரு பெண் இடுப்பிலிருந்து குறுங்கத்தியை எடுத்து இறுகப் பிடித்துக் கொண்டான்.
யாரது.." கமலக்கண்ணன் அதட்டினான்.
"நீங்கள் யார்-" பதிலுக்கு பெண்கள் சீறினார்கள்,
*தஞ்சை புறவெளி நகரக்காவலன் கமலக்கண்ணன்"
இவர் யார்.?" கத்தி வைத்திருந்த பெண் கேட்டாள். "இவர் ஒரு அதிகாரி. எ எதிர் கரைக்குப் போகப்போகிறார்.."
"நாங்கள் சிதம்பரத்தில் இருந்து வருகிறோம். என் பெயர் எச்சுமண்டை. இவன் கரிய மாணிக்கம். பழமர்நேரி என்கிற ஊர் எது..
அந்தப் பெண் கேட்டாள்.
"இதுவே பழமர்நேரி, இங்கு உங்களுக்கு என்ன பணி.."
"எந்தப் பணியும் இல்லை. நாங்கள் குடிபெயர்கிறோம். இடைத் தங்கலுக்காக எங்களுக்கு பழமர்நேரியில் இடம் ஒதுக்கி ஓலை கொடுக்கப்பட்டிருக்கிறது..."
"ஓலை எங்கே." கமலக்கண்ணன் கேட்டாள்.
"முதல் வண்டியில் வருகிறது" - கரியமாணிக்கம் என்கிற பெண் திரும்பிக் கைகாட்டினாள்.
அவள் கைகாட்டிய நேரம் வண்டி இடப்பக்கம் மல்லாந்தது. வெள்ளத்தால் இழுக்கப்பட்டு தலைகீழாயிற்று. காவிரியின் நடுவிலிருந்து பெண்களின் அலறல்கள் கேட்டன.
சுமலக்கண்ணன் ஆற்றில் பாய, பிரம்மராயர் குதிரையைக் காவிரியில் இறக்கினார். வெள்ளம் குதிரையை வேகமாக இழுத்தது. பிரம்மராயர் கவலையானார்.
மேலும் படிக்க...
0 Comments