உடையார் Second Chapter Part 1

உடையார்

 

2

 

    காவிரி ஜீவததி இல்லை. இவ்வளவு நீண்ட பரப்பு கொண்ட சமவெனி மிகுந்த சோழ நாட்டில், மூலை முடுக்கு களெல்லாம் இடையறாது பாயும்படியான ஒரு ஜீவநதி இல்லாதது பெரிய துக்கமே.

    சித்திரை மாத மத்தியில் காவிரி வறண்டு போகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு வெறும் மணலாய்க் கிடக்கிறது. நடுநடுவே எப்போதேனும் மழை பெய்தால் குட்டை போல சிறிது நீர் தேங்கி நிற்கிறது.

    மழை நாட்களில் காவிரியில் குளித்துக் குளித்துப் பழக்கப் பட்டவர்கள், காவிரியில் குளித்தே ஆக வேண்டும் என்ற சங்கலபம் உடையவர்கள், வெயில் நாட்களில் ஊற்று பறித்து மொண்டு குளிப்பதால் மழை நாட்களில் பெரிய சிக்கலாகி விடுகிறது.

    இடுப்பளவு ஜலம்தான் என்று நம்பி காவிரியில் இறங்கி தாண்ட முடிவதில்லை. நடந்து கொண்டே இருக்கும்பொழுதே நாலடி ஆழம் சரக்கென்று உள்ளே போய் விடுகிறது. பெண் களையோ, சிறுவர்களையோ அவ்லது மாடு கன்றுகளையோ நடத்திப் போக முடியாமல் தவிப்பு ஏற்படுகிறது.

    காவிரியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிற எவரேனும் ஒருவர் ஒரு வழி சொல்லி கயிறு கட்டிவிட, அந்தக் கயிறைப் பிடித்துக்கொண்டுதான் மக்கள் தாண்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது.

    அநேகமாய் எல்லா கிராமங்களிலும் எதிர்க்கரைக்கும் இக்கரைக்குமாய் கிராமத்துச் செலவிலேயே கயிறு கட்டியிருப் பார்கள்.

    இந்தக் கயிறை நம்பித்தான் இந்தப் பெண்கன் கூட்டம் இறங்கியிருக்கும். ஆனால் கயிறு பிடுங்கிக் கொண்டு போய் மூன்று நான்கு நாழிகைகள் ஆகியிருக்கும், காவிரியின் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே போவதை பிரம்மராயரின் உடம்பு உணர்ந்தது. ஏறி உட்கார்ந்திருந்த அவரின் குதிரை தவிப்பதிலிருந்து நன்கு தெரிந்தது.

    மும்முடிச்சோழ பிரம்மராயர் குதிரை உட்காரும் பகுதியில் தடவிப்பார்த்தார். இருபது முழக்கயிறு சுருட்டி, உட்காரும் இடத்தோடு கோர்க்கப்பட்டிருந்தது.

    பிரம்மராயர் ஆட்கள் எல்லோருமே இப்படி குதிரையில் கயிறு வைத்திருப்பார்கள். கால் வைக்கும் சேணத்திற்குள்ளே பெரிய கத்தி வைத்திருப்பார்கள். பிரம்மராயர் சட்டென்று அந்தக் கயிற்றுக் கட்டைக் கையில் எடுத்துப் பிரித்து உதறினார். சாட்டை போலச் சொடுக்கினார். அந்தக் கயிறின் மறுமுனை தொலைதூரம் போய் விழுந்தது.

    பிரம்மராயர் கவிழ்ந்த வண்டியை உற்றுப் பார்த்தார். இருட்டில் ஏழு பெண்களும் ஒரு வண்டிக்காரனும் இருப்பது தெரிந்தது.

    ஒரு மாடு விடுவித்துக் கொண்டு வேகமாகக் கரையை நோக்கி நீந்தியது. இன்னொரு மாட்டிற்கு அடிபட்டிருக்க வேண்டும். அது எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் திகைத்து நாலா பக்கமும் அலைந்து கொண்டிருந்தது.

    உருண்டுபோன வண்டியைப் பிடித்துக்கொண்டு பெண்கள் கத்திக் கொண்டிருந்தார்கள். வண்டியின் சக்கரத்தைப் பற்றியிருந்தவர்களின் கால்களை வெள்ளம் பிடித்து இழுக்க, அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    மிகவும் சிரமப்பட்டு குதிரையை உதைத்து உதைத்து, வண்டி நோக்கி பிரம்மராயர் திரும்பினார்.

    "திணறாதே...கரையேற வேண்டும் என்று நினைக்காதே எப்படியாவது அவர்களை நோக்கி நாம் போய்த்தான் ஆக வேண்டும்…"

    குதிரையை விலாவில் மறுபடியும் உதைத்தார். எக்கி எக்கி மாட்டு வண்டி நோக்கி விரட்டினார். குதிரை ஒவ்வொரு அடிக்கும் மிகுந்த சிரமத்தோடு நகர்ந்து, மாட்டு வண்டிக்கு அருகே வந்தது.

    மாட்டு வண்டிக்கு அருகே வந்ததும் கயிறை வீசி மாட்டு வண்டி மீது போட்டார். "உடம்பில் கயிறைச் சுற்றிக் கொள்ளுங்கள். குதிரை நம்மைக் கரைக்கு இழுத்துப் போய்விடும்.." என்று சொன்னார்.

    மாட்டு வண்டியின் இருபுறமும் இருக்கிற பெண்கள் கயிறைச் சுற்றிக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு பெண் தன் உடம்பில் கயிறைச் சுற்றிக்கொண்டு, பக்கத்திலிருந்த மற்ற பெண்ணுக்குக் கொடுத்தாள்.

    அந்தப் பெண் கயிறை தன் உடம்பில் சுற்றிக்கொண்டு, இன்னொரு பெண்ணுக்குக் கொடுத்தாள். கடைசியில் ஒரு பெண்ணுக்கு கயிறின் நீளம் போதாமல் போய்விட்டது. குதிரையின் சேணத்தை மறுமுனையில கட்டி இறுக்கினார்.

    அவர் இறுக்குகிறபொழுது இடது பக்கமாய் வண்டியைச் சுற்றிக்கொண்டு வந்த கமலக்கண்ணன் மெல்ல கால் ஊன்றி குதிரைக்கருகே வந்தான்.

    "வண்டியை நிமிர்த்தப் போகிறீர்களா பிரம்மராயரே." என்று கேட்டான்,

    "இல்லை. அது தமது வேலை இல்லை. இவர்களைப் பத்திரமாக கரையேற்ற வேண்டும். ஆறு பெண்கள் கயிறைச் சுற்றிக் கொண்டார்கள். குதிரையை விரட்டி கரைக்கு ஓட்டிக் கொண்டு போய்விடலாம். வெள்ளத்தில் இறங்கப் பயப்படுகிற குதிரை கரைக்குப் போசு வேண்டும் என்றால் தரதரவென்று போய்விடும். ஆனால் ஒரு பிரச்சனை. ஒரு பெண்ணுக்குக் கயிறு போதவில்லை. வெள்ளம் ஏறிக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை. நீ அந்தப் பெண்ணைப் பத்திர மாகக் கரைக்குக் கொண்டு வந்து விடுகிறாயா..."

    பிரம்மராயர் கேட்க, 'சரி' என்று கமலக்கண்ணன் தலையசைத்தான். மறுபடியும் கால் ஊன்றி ஊன்றி நடந்து அந்தப் பெண் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

    "என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள்..." என்று கை நீட்டினான். அவள் பிடித்துக்கொள்ள பயந்தான். மரக்கட்டை யைப் பிடித்துக்கொண்டு ஊசலாடினாள்.

    "ஏன் பயப்படுகிறீர்கள், நான் இந்த ஊர்க்காரன்தான் இந்தப் பக்கத்து நதியின் சுழல்கள் அனைத்தும் எங்களுக்கு அத்துப்படி. கவலை வேண்டாம். நான் உங்களைக் கரை சேர்த்து விடுவேன்.." என்று சொல்லி, கமலக் கண்ணன் மெல்ல அவள் புறங்கையைப் பற்றி இழுத்தான். அவள் பயந்துகொண்டே கை நீட்டினாள். அவன் தோளைப் பற்றிக் கொண்டாள்.

    அவள் வண்டியை விட்டதும் பிரம்மராயர் குதிரையைச் செலுத்தினார். அந்தப் பெண்களை கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். குதிரை வேகமாக கரை நோக்கிப் போயிற்று. அவர்கள் கிட்டத்தட்ட நீரின் ஓட்டமாய் கரை நோக்கிப் பயணமானார்கள்,

    கமலக்கண்ணனைப் பிடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண், அவனை இறுகப் பிடித்துக்கொள்ள வெட்கப்பட்டாள். அதே சமயத்தில் எப்படியாவது கரையேறி விட வேண்டும் என்று அவஸ்தையும்பட்டான்.

    கமலக்கண்ணன் அவளை இழுத்துக்கொண்டு போக முடியாமல் திணறினான். சற்று ஆற்றோடு போனான். குதிரை யின் பாதையிலிருந்து அவன் பாதை வேசாக விலகியது.

    இன்னும் நடக்க, சரக்கென்று காலின் கீழ் மண் சறுக்கியது. யாரோ பெரிதாய் குழி பறித்திருக்க வேண்டும். மனிதர்கள் பறித்த குழியை காவிரி வெள்ளம் இன்னும் பெரிதாக்கி விட்டது. விநாடி நேரத்தில் தலைக்குமேல் காவிரி ஓடிற்று. என்ன செய்வது என்று தெரியாமல் கமலக்கண்ணன் உதறினான். அந்தப் பெண் 'ஐயோ' என்று அலறினாள்.

    பிரம்மராயர் திரும்பிப் பார்த்தார். கமலக்கண்ணன் யதேச்சையாக கையை உதற, அந்தப் பெண் நீரில் அடித்துப் புரண்டு கொண்டு போனாள். கால் ஊன்றியபடி இருந்தாலும் அவளால் நிற்க முடியவில்லை.

மேலும் படிக்க...

Post a Comment

0 Comments