உடையார்
2
காவிரி நீர் அவளை நெட்டி நெட்டித் தள்னிக்கொண்டு போயிற்று. மூன்று நொடி நேரத்தில் அவள் கமலக்கண்ணனிட மிருந்து வெகு தூரத்திலிருந்தாள். குதிரையைக் கரையேற விட்டுவிட்டு, குதிரையிலிருந்து எகிறி, அந்தப் பெண்ணை நோக்கி பிரம்மராயர் தாவினார். வேகமாக நீந்தினார். நீரின் வேகத்தோடே போனார்.
அந்தப் பெண்ணை பிரம்மராயர் நெருங்க, அந்தப் பெண் விலக, அங்கு ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடந்தது. சட்டென்று எகிறி அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்தார்.
"உனக்கு நீச்சல் தெரியுமா…" என்று கேட்டார்.
"தெரியாது..." அந்தப் பெண் பதில் சொல்லிற்று. இருட்டில் முகம் தெரியாமல் குரல் மட்டும் இனிமையாய் காதில் விழுத்தது.
“பிறகு என்ன தைரியத்தில் இருட்டில் ததியில் இறங்கினாய்? காலையில் பொறுத்து வரவேண்டியதுதானே. திரும்பு. என் முதுகைப் பற்றிக்கொள்." என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு முதுகைக் காட்டினார். அவள் முதுகை மெல்ல பற்றிக் கொண்டாள்.
"இப்படிப் பற்றிக்கொண்டால் உன்னால் எதுவும் செய்ய முடியாது. என்னையும் நடக்க விடமாட்டாய். இறுகப் பற்றிக் கொள். உன்னை நான் என்னோடு பிணைத்துக்கொள்கிறேன். இப்பொழுது வெட்கப்பட்டாயென்றால் வாழ்க்கை முழுவதும் வேதனைப்படும்படி நேரும்.
வெள்ளம் எங்கேனும் முள்புதரில் ஆளைச் சொருகிவிடும். சொருகிய முன்புதரிலிருந்து மனிதனை விடுவிப்பது மிகவும் கடினம். ஓநாய்கள் நீரில் இறங்கி கடிக்கத் துவங்கிவிடும். காவிரிக்கரை முழுக்க நீர் நாய்கள் உண்டு. நீர் தாய்கன் கடித்தால் நிச்சயம் மரணம். எனவே முட்டாள்தனமாக எதுவும் செய்யாமல் என்னை இறுகப் பிடித்துக்கொள்..." என்று முதுகு காட்டினார்.
அவள் எகிறி அவரை இறுகப் பின்னிக் கொண்டான். பிரம்மராயர் மேல் துண்டால் அவளையும், தன்னையும் இறுக்கி முடிச்சுப் போட்டுக் கொண்டார். மணலில் கால் ஊன்றி, நீரைக் கிழித்து கரை நோக்கி நடந்தார். நெஞ்சு ஆழம் இருந்த நீர் சிறிது நேரத்தில் சட்டென்று இடுப்புக்கு வந்தது. தொடைவரையில் ஜலம் போயிற்று.
பிரம்மராயர் அவளையும் தன்னையும் பிணைத்திருந்த துண்டை உருவினார். அவள் இடக்கையைப் பிடித்துக்கொண்டு 'வா' என்று கரையேறினார். வண்டியை இழுத்து வரலாமா என்பதற்காகத் திரும்பிப் பார்த்தார். 'நீ கரையேறு' என்று சொன்னார்.
அவள் தொடையளவு ஜலத்தில் நடந்து போனாள். கரைக்கு அருகே போகும் நேரத்தில் சட்டென்று கரை ஆழமாகிவிட்டது போலும். அவள் கழுத்துவரை நீரில் மூழ்கினாள். புரண்டாள். நீர் அங்கு சுழன்றிருந்தது. உள்ளே இழுக்கப்பட்டாள்.
மறுபடியும் வெளியே தள்ளப் பட்டாள். புரண்டு காவிரிக்கரை ஓரமாகவே போய் ஒரு முள் செடியை இறுகப் பிடித்துக் கொண்டாள். 'உதவி உதவி' என்று பேயாய்க் கத்தினாள்.
பிரம்மராயர் கால் உதறி, தன் கனத்த சரீரத்தை தண்ணீரில் சப்தமெழப் போட்டு, அவள் சென்ற திசை நோக்கி வேகமாக நீந்தினார். நீர் அவரையும் புரட்டியது. இழுத்து ஓரம் தள்ளியது. ஓரத்தில் கரையேற கால் வைத்தார். கால் சறுக்கி அவரை நடுநதிக்கு இழுத்துப் போனது.
"நீ என்ன செய்தாலும் நான் அதற்கு எதிர்ப்பதமாய் செய்வேன்' என்பது போல எந்தவிதமாய்த் தப்பிக்க முயற்சித் தாலும் நதி அதைத் தடுத்தது. இம்மாதிரி செடிகள் நிரம்பிய கரையில் கால் வைத்து வழுக்கி, சறுக்கி அடிபடுவதைவிட படிகள் நிரம்பிய துறைகளில் கால் வைத்து ஏறிவிடலாம்.
பிரம்மராயர் கடினமாக முயன்று முன் செடிக்கு அருகே போனார். மிக கவனமாய் துணிவோடு முள் செடியைப் பிடித்துக் கொண்டார். அந்தப் பெண்ணிடம், அதை விட்டு விடுங்கள். விட்டு விடுங்கள்' என்று கத்தினார்.
அந்தப் பெண்ணுக்கு முப்பது வயதிருக்கும். அவன் அந்த முள் செடியை விடுவதற்குப் பயந்தான்.
"நாம் அதிக நேரம் இங்கு நிற்க முடியாது. உங்கள் உடம்பெல்லாம் முட்கள் கீறி காயப்படுத்தி விடும். முள்புதரில் தான் பாம்புகள் பதுங்கி இருக்கும். தயவுசெய்து கையை உதறி விடுங்கள். நடு ஆற்றிற்குப் போய் விடலாம். என் தோளைப் பிடித்துக் கொள்ளுங்கள். இங்கு படி எங்கிருக்கிறதென்று எனக்குத் தெரியும். சற்றும் பயப்படாதீர்கள்." அவர் கெஞ்ச லாய் சொன்னார்.
அப்பொழுதும் அந்தப் பெண்மணிக்கு விட மனமில்லை. அவர் இழுக்க, இன்னும் வேகமாய் முன் செடியைக் கட்டிக் கொண்டாள் 'ஓ'வென்று அலறினாள்.
'என்ன ஆயிற்று, என்ன ஆயிற்று' - தொலை தூரத்திலிருந்து பல்வேறு குரல்கள் கேட்டன. பழமர்நேரி கிராமம் விழித்துக் கொண்டு தீப்பந்தங்களுடன் வருவது தெரித்தது.
"தயவு செய்து கையை விடுங்க...” என்று பிரம்மராயர் அவள் தோனைப் பிடித்து இழுக்க, அவன் திரும்பி பயத்தோடு பிரம்மராயரை ஆரத்தழுவிக் கொண்டாள்.
பிரம்மராயர் அவள் இடுப்பை அணைத்தபடி காலுதைத்து நதியின் நடுப்பக்கம் நகர்ந்தார். அந்தப் பெண்மணி யின் முழு உடம்பும் அவர் உடம்போடு இறுகப் பின்னிக் கொண்டது.
அவர் தன் கால்களை அசைப்பதுகூட கடினமாக இருந்தது. அசைக்கிறபோது அவளுடைய மெத்தென்ற உடம்பு மேலே பட்டது. அவர் இடதும் வலதும் கவனித்துக்கொண்டே ஒருக்களித்து நீந்தி, அவளை அணைத்தபடி மறுபடியும் கரை நோக்கி நகர்ந்தார். இந்த முறை காலடியில் பாறைகள் தென்பட்டன. இன்னும் நகர்ந்துபோக, செதுக்கப்பட்ட படித்தளம் தெரிந்தது.
நின்று கொண்டார்கள். அங்கேயும் நீர் இழுத்தது. பாசி வழுக்கியது. மிக நிதானமாய் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நடந்தார்கள். அடுத்தபடியில் கால் வைத்தார்கள். கால் வைக்கும் போது மிக கவனமாய் இரண்டு பேரும் ஒரேவிதத்தில் ஊன்றி னார்கள். அடுத்த படியில் கால் வைத்தார்கள். இம்முறையும் மிக கவனமாய் ஊன்றி நடத்தார்கள். இப்பொழுது முழங்காலைவு ஜலத்தில்தான் இருந்தார்கள்.
"நீங்கள் கரையேறுங்கள்..." பிரம்மராயர் அவளை மெல்ல நகர்த்தினார். அவள் கரையேறினாள். பிரம்மராயரால் அடுத்த அடி அழுத்தி வைக்க முடியவில்லை. அந்தப் படியில் பாசி அதிகமிருந்தது.
'அந்தப் பெண்மணி எப்படி மேலே தடந்து போனாள்' என்ற ஆச்சரியம் எழுந்தது. பாசியில் கால் வைக்க, ஊன்றுகின்ற கால் வேகமாக வழுக்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் பிரம்மராயர் நிற்க, அவள் கீழிறங்கினாள். புடவையை விலக்கினாள். ஒரு முனையை பிரம்மராயரிடம் கொடுத்தாள்.
"இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். அத்தப் படியில் அடர்த்தியாய் பாசி இருக்கிறது. ஒரு விரற்கடை அளவுக்குச் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இது உபயோகப்படுத்தப்படாத படித்துறை என்று நினைக்கிறேன். என் புடவையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு மேலே வந்து விடுங்கள்."
அவள் புடவையின் நுனியைத் தர, அவர் வாங்கிக் கொண்டு படியில் கால் வைத்தார். அவள் முழு பலத்தோடு தோளில் புடவையைப் போட்டுக் கொண்டு அவரை இழுக்க முயற்சித்தாள்.
அவர் மூன்றாவது படியையும், இரண்டாவது படியையும், முதல் படியையும் தாண்டி மண்ணில் கால் வைக்கும் போது, மரணத்திலிருந்து மீண்டு விட்டது போல ஒரு அயற்சி உடனே படர்ந்தது. உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
சற்றுநேரம் மரத்தைப் பிடித்துக்கொண்டு சாய்ந்து கிடக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் இடுப்பில் கை வைத்து மற்றவர்கள் கரையேறி விட்டார்களா என்று பார்த்தார். இருட்டில் எதுவும் தெரியவில்லை. தீப்பந்தங்களின் வெளிச்சம் செடிகளூடே தெரித்தது.
"வாருங்கள் நாம் போவோம்..." அவர் பாதை தேடி கரையோரம் போனார். எல்லா ஆற்றங்கரையோரமும் ஒரு ஒற்றையடிப்பாதை போகும். அந்த ஒற்றையடிப்பாதை எளிதில் கண்ணுக்குப் புலப்பட்டது. அவர் நடக்கத் துவங்கினார். அவள் தொடர்ந்து வந்தாள்.
"உங்கள் பெயரெள்ள தாயே?"
"இராஜராஜி..."
"சிதம்பரத்திலிருந்து வருகிறீர்களா?"
"இல்லை. என் ஊர் திருவக்கரை_"
"என்ன... திருவக்கரையா? அவ்வளவு தொலைவிலிருந்தா வருகிறீர்கள்."
"ஆமாம்..."
"உங்களையும் குடிபெயரச்சொல்லி ஓலை வந்ததா..."
"இல்லை. நான் குடிபெயர்வதற்காக வரவில்லை."
"பிறகு?"
"வரைபடங்கள் கொண்டு வந்திருக்கிறேன்..."
"எதற்கு?"
"கோவில் மண்டப வரைபடங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டது. அவைகளைக் கொண்டு போய் தஞ்சையில் தர வேண்டும் என்று கட்டனை இருந்தது."
"இப்போது வரைபடங்கள் எங்கே."
"அதோ.... குப்புறக் கிடக்கும் அந்த மாட்டு வண்டியில்
வரைபடங்கள் இருக்கின்றன.." பிரம்மராயர் திகைத்தார். அந்த மாட்டு வண்டி, அங்குள்ள எல்லா உயிர்களையும்விட மிக முக்கியமான உயிராக அவருக்கு அந்த நேரம் தென்பட்டது.
மேலும் படிக்க...
0 Comments